|
காசநோயும்
கர்ப்பிணித் தாய்மாரும்
கற்பிணித்தாய்மாராக இருந்தாலும் காசநோய்க்கான மருந்தினை நோய்
ஏற்படின் எடுக்க வேண்டும். பாலூட்டும் தாய்மாரும் நோய் ஏற்படின்
காசநோய்க்கான மருந்தினை எடுப்பதுடன், குழந்தைகளுக்கு தொடர்ந்து
தாய்ப்பாலூட்டல் அவசியம்.
காசநோயும் எயிட்ஸ் நோயும்
எயிட்ஸ்
நோயாளிகளில் 50% மானோர் காசநோய்த் தொற்றாலேயே
இறக்கின்றனர்.காசநோயாளிகளுக்கு எயிட்ஸ் நோய் வரும் சாத்தியம்
இல்லை. ஆனால் எயிட்ஸ் நோயாளிகளுக்கு காசநோய் வரும் சாத்தியம்
அதிகம் உண்டு எனவே காசநோயாளிகளை எயிட்ஸ் நோய்ப் பரிசோதனைக்கு
உட்படுத்தல் அவசியம்.காசநோயாளிக்கு எயிட்ஸ் நோய் காணப்படும்
போது முதலில் காசநோயிற்கே சிகிச்சை அளிக்க முன்னுரிமை
அளிக்கப்படும். |
 |