|
காசநோய் பரவும் விதம்
Φகாசநோயால்
பாதிக்கப்பட்டவர் சிகிச்சைபெறாது உள்ளபோது,
Φஇருமும்
போதும்
Φதும்மும்
போதும்
Φகதைக்கும்
போதும்
Φஎச்சில்,
சளியினைத்துப்பும் போதும் கிருமிகள் காற்றினை அடைகின்றன.
ஒருவருக்கு நோய் தொற்றுவது அவர் காசநோய்க்கிருமிகள் உள்ள
காற்றினை எவ்வளவு நேரம் சுவாசிக்கிறார் என்பதிலும்
காசநோய்க்கிருமிகளின் செறிவிலும் தங்கி உள்ளது.
எனவே காற்றோட்டமான, சூரிய ஒளி உள்ள இடத்தில் வாழ்வதால்
காசநோய்க்கிருமிகள் தொற்றும் வாய்ப்புக்குறைவு. |
 |
|
காசநோயினால் பாதிக்கப்படக்கூடியவர்கள்
Φகாசநோயாளிகளுடன்
நெருங்கிய தொடர்புடையவர்கள்.
Φபோசாக்கு
குறைபாடு உடையோர்.
Φநெருங்கிய
இடங்களில் வாழ்பவர்கள்.
Φகாற்றோட்டம்,
சூரியஒளி குறைந்த இடங்களில் வாழ்பவர்கள்.
Φஎயிட்ஸ்
நோய், சலரோகம், புற்று நோயுடையோர்.
Φமதுபானம்,
போதைப்பொருள் பாவிப்போர்.
Φபுகைப்பிடிப்பவர்கள்.
|
 |