|
|
காசநோய் - வரலாறு
-
உலகில்
காசநோய்க்கிருமி பல ஆயிரம் ஆண்டுகளாக உயிர்வாழுகின்றது.
-
கி.மு
8000 ஆண்டுக்குரிய ஜேர்மனிய நாட்டு மனித என்புக்கூடுகளில்
இக்கிருமி அவதானிக்கப்பட்டது.
-
கி.மு
2500 - கி.மு 1000 ஆண்டு எகிப்திய மம்மிகளிலும் இக்கிருமி
காணப்பட்டது. இது காசநோய்க்கிருமியின் உலக காலநிலை
மாற்றங்களுக்கும் தப்பி உயிர்வாழும் தன்மையைக்
காட்டுகின்றது.
-
1882ம்
ஆண்டு பங்குனி மாதம் 24ம் நாள் றொபேட்கொச் என்பவரால்
இந்நோய்க்கிருமி நுணுக்குக்காட்டியால் கண்டறியப்பட்டது.
-
தனிமைப்படுத்தும்
சிகிச்சையும், சூரிய ஒளிச்சிகிச்சையும் (Sanitorium)
உருவாக்கப்பட்டது.
-
1944ம்
ஆண்டு Streptomycin கண்டுபிடிக்கப்பட்டது.
உலக
நாடுகளில் காசநோய்த் தாக்கம்
-
உலகில்
20 மில்லியன் மக்கள் காசநோயினால் பாதிக்கப்பட்ட வண்ணம்
உள்ளனர். இதில் 10மில்லியன் மக்களிற்கு சளியில் கிருமி
காணப்படுகின்றது.
-
உலகில்
காசநோயாளிகளில் பெரும்பாலானோர் ஆசியாக் கண்டத்தில் உள்ளனர்.
AIDS நோயாளிகளுக்கு காசநோய்ப்பரம்பல் அதிகம்
உள்ளதால் ஆபிரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் காசநோய்
பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.
-
யுத்தத்தினால்
சீர்குலைந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் MDR-TB
பரம்பல் அதிகம் உள்ளது.
-
தென்கிழக்கு
ஆசியாவில் காசநோய்த்தாக்கம் வங்களாதேசம், இந்தியா, பூட்டான்,
வடகொரியா, இந்தேனேசியா, மாலைதீவு, மியாமார், நேபாளம்,
இலங்கை, தாய்லாந்து, கிழக்கு தீமோர் ஆகிய நாடுகளிலுள்ளது.
இலங்கையில் காசநோய்
-
இலங்கையில்
ஆண்டுதோறும் ஒரு இலட்சம் மக்களில் 54 பேர் காசநோயால்
பாதிக்கப்படுகின்றனர். இதில் 25 பேர் சளியில் கிருமி உள்ள
காசநோயாளிகள்.
-
ஆண்டுதோறும் 9000
காசநோளாளர் சிகிச்சை பெறுகின்றனர். இதில் 4500 பேர் சளியில்
கிருமி உள்ள காசநோயாளிகள்.
-
இலங்கையில்
காசநோயாளிகள் அதிக அளவில் நெருக்கமான நகரங்களில் உள்ளனர்.
கிராமப்புறங்களில் சளிப்பரிசோதனை செய்யும் வசதிகள் குறைவு
என்பதால் காசநோயாளர் இனம் காணப்படல் குறைவாக உள்ளது.
காசநோய் என்றால் என்ன?
-
மைக்கோ
பக்ரீரியம் (Mycobacterium
tuberculosis ) பக்ரீரியாவினால் ஏற்படும் தொற்று
நோய்.
-
இது ஒரு
பரம்பரை நோயல்ல.
-
Tuberculosis (TB)
எனப்படும் இந் நோய் காற்றின் மூலம் பரவுகின்றது.
-
சுவாசத்தின் மூலம்
தொற்றும் இந் நோய்க்கிருமி பெரும்பாலும் சுவாசப்பையில் நோயை
ஏற்படுத்துகிறது.
-
உலகில்
1/3 பங்கினர் காசநோய்க்கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
-
காசநோய்க்கிருமித்
தொற்றுக்குள்ளான அனைவருக்கும் காசநோய் ஏற்படுவதில்லை.
-
ஒருவரது
நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும் சந்தர்ப்பத்திலேயே அவருக்கு
காசநோய் ஏற்படுகிறது.
|
 |
 |
|
|
 |
|